உலகம்

5 ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

அதிவேக இணைய வசதியை அளிக்கும் 5 ஜி சேவையை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார். 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் கடந்த ஜூலையில் நடந்தது. ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன.

ஏலத்தின் முடிவில் ரூ.1,50,173 கோடிக்கு 5ஜி அலைக்கற்றைக்கான உரிமம் விற்பனை செய்யப்பட்டது. தொலைத்தொடர்புத் துறையில் முன்னணியில் இருக்கும் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அக்டோபருக்குள் சில முக்கிய நகரங்களில் 5 ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார்.

2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இந்நிலையில், ஆசியாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான, ‘இந்திய கைப்பேசி மாநாடு’ டெல்லி பிரகதி மைதானத்தில் இன்று முதல் வரும் 4ம் தேதி வரை நடக்கிறது.

ஒன்றிய தொலைத் தொடர்பு துறை மற்றும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இதை நடத்துகின்றன. இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று, 5ஜி சேவையை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.

தொடர்ந்து, 5ஜி அடிப்படையிலான டிரோன்கள், கழிவுநீர் கண்காணிப்பு அமைப்புகள், சுகாதாரம் தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் இணைய பாதுகாப்பிற்கான செயற்கை நுண்ணறிவு சார்ந்த தளங்கள் மூலம் விவசாயத்தின் தொழில்நுட்பத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button