ஜோதிடம்

2023 சனி பெயர்ச்சி எப்போது நிகழும்?

சனி பெயர்ச்சி ஆனது 2023ஆம் ஆண்டு தை மாதம் 3ஆம் நாளான ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ஆம் ஆண்டு பங்குனி மாதம் 15ஆம் நாளான மார்ச் மாதம் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார்.

கிரகப்பெயர்ச்சிகள் மாதம் ஒருமுறை, ஆண்டுக்கு ஒருமுறை என அவ்வப்போது நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் சனிப்பெயர்ச்சி காலத்தில் எல்லோருடைய மனதிலும் இந்த சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறதோ? நம்மை எவ்வாறு வாட்டி வதைக்கப்போகிறதோ? என்று சிந்தனை எழும்.

ஏனெனில் சனி ஒரு ராசிக்கு இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கின்றார். இந்த காலக்கட்டத்தில் நமக்கு அதிக படிப்பினையை சனிபகவான் கொடுத்துச் செல்கிறார். அதிலும் ஏழரை சனி என்றால் சொல்லவா வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button