சினிமா

வெடித்தது சண்டை.. கொந்தளித்த ஜிபி முத்து!

பிக் பாஸ் 6ல் இன்று போட்டியாளர்களுக்கு யார் அதிகம் சத்தமாக கத்துகிறார்கள் என பார்க்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது நான்கு அணிகளில் இருந்து ஒவ்வொருவர் வந்து மைக் முன்பு கத்த வேண்டும் என சொல்லப்பட்டது.

ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், அஸீம், விக்ரமன் ஆகிய நான்கு பேர் தான் கத்த வந்தனர். முதலில் கத்திய அஸீமுக்கு என்ன மார்க் என்பது டெக்னிக்கல் error காரணமாக காட்டவில்லை. அடுத்து கத்திய ஜிபி முத்து 1.5 புள்ளிகள் பெற்றார்.

அதன் பின் வந்த விக்ரமன் மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் தலா 1.2 புள்ளிகள் பெற்றனர்.

ஜிபி முத்து தான் வெற்றி பெற போகிறார் என தெரிந்தபின் விக்ரமன் தனக்கு 2ம் சான்ஸ் வேண்டும் என கேட்க தொடங்கினார். அதனால் சண்டை வெடித்தது.

கொந்தளித்த ஜிபி முத்து ‘இதையே தினமும் எல்லா டாஸ்க்கிலும் கேட்பீங்களா, இதெல்லாம் தப்பு. இப்படி ஆடாதீங்க’ என கொந்தளிக்க தொடங்கிவிட்டார்.

ஜிபி முத்துவா இப்படி என மற்றவர்களே ஷாக் ஆனார்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button