இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கில் மாவீரர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நவம்பர் மாதம் வடமாகாணத்தில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்போருக்கு பாதுகாப்பு தரப்பினர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.

மாவீரர் தினத்தினை நடத்தும் தரப்பினர் பயங்கரவாதிகளையோ அல்லது அது சார்ந்த அமைப்பையோ பிரசாரம் செய்தாலோ அல்லது ஆடம்பரமான கொண்டாட்டங்களை மேற்கொண்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைந்துள்ள இடத்தை துப்பரவு செய்யும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டதைத் தொடர்ந்தே படையினர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button