சினிமா

மீண்டும் கமலுக்கு வில்லனாகும் முன்னணி நடிகர்

கமல் ஹாசன் அடுத்ததாக எச். வினோத் இயக்கத்தில் தன்னுடைய 233வது படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் கமல் ஹாசன் – மணி ரத்னம் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது.

கமலின் 234வது படத்தை மணி ரத்னம் இயக்கவுள்ளார். இப்படத்தை ராஜ் கமல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய மூன்று நிறுவனங்களும் தயாரிக்கிறது.

எச். வினோத் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் கமலுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து எச். வினோத் படம் இயக்குவதாக இருந்தார் என்பதும், விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button