இலங்கை

பிரபாகரனின் பூர்வீக இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஜனனதினம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள  நிலையில் , வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் இராணுவத்தினர் , பொலிஸார் , புலனாய்வுப் பிரிவினர் பெருமளவில் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் உள்ள மாவீரர் நினைவிடத்தை சிரமதானம் மூலம் துப்புரவு செய்ய இராணுவத்தினர் தடை விதித்தனர்.

இராணுவததின் தடைகளை மீறி துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது , துப்புரவு பணிகளை மேற்கொண்டவர்களை இராணுவத்தினர் ஒளிப்படங்கள் எடுத்து , அச்சுறுத்தும் பாணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button