இலங்கைமுக்கியச் செய்திகள்
திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு விடுமுறையா?
தைப்பொங்கல் தினத்துக்கு அடுத்தநாள் திங்கட்கிழமை என்பதால், தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் இது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தவணைக்கான பாடசாலை நடைபெறும் நாட்களின் எண்ணிக்கையை கருத்திற் கொண்டு விடுமுறை வழங்காதிருக்க தீர்மானித்திருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கல்வியமைச்சினால் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.