இலங்கை

தங்கம் விலையில் பாரிய மாற்றம்!!

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாகவும், இன்று (31) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக பதிவாகி உள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை 154,500 ரூபாவாக இருந்து தற்போது 149,000 ஆக உள்ளது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது 161,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.

இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும், டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button