ஆன்மிகம்

சைவப்புலவர் பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ் சைவப்புலவர் பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயலாளர் சைவப்புலவர் செ.த.குமரன் தெரிவித்துள்ளார்.

மேற்படி பரீட்சைக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்பாக சைவப்புலவர் சி.கா.கமலநாதன், தலைவர், அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், இல-610 காங்கேசன்துறை வீதி, இணுவில் எனும் முகவரிக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

விண்ணப்பப் படிவம் மற்றும் பாடவிதானத்தினை kumarandrama@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 0779773538, 0777197067 வாட்சப் இலக்கம் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த இரு பரீட்சைகளுக்குமான விண்ணப்ப முடிவுத் திகதி 30.09.2022 என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

விண்ணப்ப படிவம் : Download

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button