ஜோதிடம்

சனிப்பெயர்ச்சி 2023.. விரயத்தை ஏற்படுத்தும் அர்த்தாஷ்டம சனி..!!

சனிதேவர் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்வது அர்த்தாஷ்டம சனி ஆகும்.

உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தி மருத்துவ செலவுகளால் சேமிப்புகளை விரயம் செய்யக்கூடிய நிலையை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

எதற்கெடுத்தாலும் வம்பு, தகராறு, கலகம் செய்து தனக்கு ஏற்படக்கூடிய இன்பத்தை தானே கெடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே, கவனமாக இருக்கவும்.

புதிய தொழில் முயற்சிகள் சரியாக அமையாமல் முயற்சிகளை கைவிடும் நிலைக்கு கொண்டு செல்ல நேரிடும்.

வாகனங்களால் விபத்துகளை ஏற்படுத்தி உடல் சுகங்களை கெடுக்க வாய்ப்புண்டு.

உறவுகளால் வருத்தங்கள் ஏற்படும். கல்வியில் தடை, மந்தத்தன்மையை ஏற்படுத்தும்.

பழைய வீடுகளை புதுப்பித்து அங்கு குடியேற்றம் செய்ய வைக்கும். தாயின் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

கிரகங்களின் பார்வை, லக்ன அசுபர் மற்றும் சுபர் என்ற நிலைக்கு ஏற்பதன் செயல்பாடுகளை உண்டாக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button