ஜோதிடம்
சனிப்பெயர்ச்சி 2023.. மாரியை போல் பலன் தரும் சகாய சனி..!!
இதுவரை துன்பங்கள் மட்டும் அளித்துவந்த சனிபகவான் ராசிக்கு மூன்றாம் இடத்தில் வரும்போது துன்பங்களை அளிக்காமல் மாறாக இன்பங்களை மாரியை போல் தருகிறார்.
மாரியை போல் பலன் அள்ளித்தரக்கூடிய இந்த சனிதேவரை சகாய சனி என்று அழைக்கிறோம்.
மனதில் நாம் எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றுவார்.
இல்லங்களில் சுபநிகழ்ச்சிகளால் இன்பங்களை தரக்கூடியவர்.
எதிர்பார்த்த பண உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கப்பெற்று இழந்த பொருட்களை மீட்க வைப்பார்.
சாணக்கியனை போல பல துறைகளில் அறிவுதிறன்களை மேம்படுத்தி ஊக்கமும், உற்சாகமும் மற்றவர்களுக்கு கொடுக்கும் நிலைக்கு நம்மை உயர்த்துவார்.
குடிசை வீட்டை கோபுர வீடாக மாற்றக்கூடிய காரிய வள்ளல் ஆவார்.