ஜோதிடம்

சனிப்பெயர்ச்சி 2023.. பாதை மாற்றும் பாதச்சனி.. என்னவெல்லாம் செய்யும்?

பாதச்சனி என்றால் என்ன?
பாதச்சனி என்பது ராசிக்கு இரண்டில் சனிதேவர் சஞ்சாரம் செய்வதாகும். இந்நிலையில் உள்ள சனிதேவரை குடும்ப சனி அல்லது பாதச்சனி என்று அழைப்பார்கள்.

பாதச்சனி, விரயச் சனி மற்றும் ஜென்ம சனி அளவிற்கு பாதகங்களை ஏற்படுத்தாது. பாதச்சனி நடைபெறும்போது வடுக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதற்கான சூழல் அமையும்.

பாதச்சனியால் உண்டாகும் பலன்கள் :
கல்வியிலும், பதவிகளிலும் எந்தவித முன்னேற்றம் இன்றி மந்த நிலையாகவே இருக்கும்.

வீடு கட்டுபவர்களுக்கு சரியான வேலையாட்கள் அமையாமல் வீட்டு வேலை பாதியில் நிற்கும் நிலை ஏற்படலாம்.

கால்நடைகள் மற்றும் வாகனங்களால் லாபம் இல்லாமல் போகலாம்.

தேவையில்லாத செயல்களால் பொருள் இழப்பு ஏற்பட்டு பண நெருக்கடி போன்ற சூழல் அமையலாம்.

வாக்கு ஸ்தானத்தில் சனிதேவர் இருப்பதால் தன் பேச்சாலேயே பிரச்சனைகளை தேடிக் கொள்வார்கள். பயன் இல்லாத பல அலைச்சல்களை ஏற்படுத்துவார்.

பாதச்சனி நடைபெறும் காலங்களில் காலில் அடி, சுளுக்கு, புண், வாதம் போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு.

ஒரு சிலருக்கு வாழ்க்கையில் ஊக்கமோ, உற்சாகமோ இல்லாமல் வாழ்க்கையில் இதுவரை விரும்பி வந்த அனைத்தையும் வெறுத்து தத்துவங்கள் பேசும் விரக்தி நிலைக்கு கொண்டு செல்வார்.

சென்ற ஜென்மங்களில் செய்த கர்மவினைக்கு ஏற்ப இந்த நிலையில் உள்ள சனிபகவான் செயல்படுவார்.

பரிகாரங்கள் :
சனிக்கிழமைதோறும் கோயிலில் இருக்கும் நவகிரக சன்னதியில் இருக்கு சனிபகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி, எள் சாதத்தை நைவேத்தியமாக படைத்து வழிபட்டு வரவேண்டும்.

தினந்தோறும் காலையில் காகங்கள் மற்றும் இதர பறவைகளுக்கு உணவளித்து பின்னரே சாப்பிடுதல் வேண்டும்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சேநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை வழிபடவும்.

சனிக்கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகள் அணிந்து வந்தால் சனி பகவானின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button