சினிமா

கமல் எடுத்த அதிரடி முடிவு.. கண்ணீர் விட்டு கதறிய தனலட்சுமி

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என சொல்லி பிக் பாஸ் ஷோவில் அடிக்கடி எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடைபெற்று வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் தனலக்ஷ்மிக்கு ஷாக் கொடுத்து இருக்கிறார்.

இந்த வாரம் நடந்த ஸ்வீட் கடை டாஸ்கில் எப்படியோ ஏமாற்றி தனலட்சுமி டீம் ஜெயித்தது. அதை குறும்படமாக கமல் போட்டு காட்டிய நிலையில் எல்லோரும் அதை பார்த்து சிரிக்கிறார்கள்.

எல்லோரை போல நானும் சிரித்துக்கொண்டிருக்க முடியாது என சொல்லும் கமல், தனலக்ஷ்மியின் வெற்றி பறிக்கப்படுவதாக அறிவிக்கிறார். அதனால் நாமினேஷனில் இருந்து அவர் இந்த வாரம் தப்ப முடியாது.

நேர்மையாக விளையாடிய விக்ரமன் தரப்புக்கு தான் இந்த வெற்றி சேரும் என கமல் அறிவிக்க அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதன் பின் தனலட்சுமி இதற்காக கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

மேலும் தற்போது வெளியான இரண்டாம் ப்ரொமோவில் கமல் ஒரு டாஸ்க் கொடுத்து இருக்கிறார். ‘இவருடன் சேர்ந்தால் இருப்பதும் போய்விடும்’ என ஒரு போட்டியாளரை தேர்வு செய்து சொல்ல வேண்டும் என கமல் கூறுகிறார்.

பலரும் கோபமாக இந்த டாஸ்கில் பேசுகிறார்கள். அதனால் வரும் நாட்களில் இந்த விஷயத்திற்காக சண்டைகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button