ஜோதிடம்

ஏழரை சனி எந்தெந்த ராசிக்கு?

ஒருவரின் ஜாதக கட்டத்தில் ஜெனன சந்திரன் இருக்கும் ராசிக்கு 12, 1, 2 ஆகிய வீடுகளில் சனிபகவான் கடந்து செல்லும் காலமானது ஏழரை சனி என்று அழைக்கப்படுகின்றது. இந்த ஆண்டு நடைபெறும் சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியின் தாக்கத்திற்கு உட்படும் ராசிகள் பின்வருமாறு.

மகர ராசிக்கு ஜென்ம சனி முடிந்து பாதச்சனி ஆரம்பிக்கிறது.

கும்ப ராசிக்கு விரய சனி முடிந்து ஜென்ம சனி ஆரம்பிக்கிறது.

மீன ராசிக்கு லாப சனி முடிந்து விரைய சனி ஆரம்பிக்கிறது.

ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரய சனி, ஜென்ம சனி, பாதச்சனி என்ற நிலைகளில் இருந்து அந்தந்த ராசிகளுக்கு புதுவிதமான அனுபவத்தையும், படிப்பினையும் அளிப்பார்.

அர்த்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி காலத்தில் பலவிதமான இன்னல்களை உருவாக்கினாலும் கடைசியில் நன்மையான பலன்களை கொடுப்பார். மனதில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் மற்றும் புதுவிதமான புரிதல்களையும் உருவாக்குவார்.

கிரகங்களின் மூலம் உண்டாகும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள திசாபுத்திக்கு ஏற்ப நவகிரகங்கள் அளிக்கும். அதாவது திசாபுத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையையும் தரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button