கோயில்கள்

உரும்பிராய் ஐயப்பன் ஆலயத்தின் மகரஜோதி மண்டலப் பெருவிழா ஆரம்பம்!

யாழ்.உரும்பிராய் தெற்கு சாட்டுபத்துாா் சபரிபீடம் அரள்வளா் சிவதா்மசாஸ்த்தா தேவஸ்தானத்தில் ஜெயவத்ஸாங்க குரு சுவாமி திருமாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று கார்திகை மாதம் 01ஆம் நாள் பகல் 10.00 மணி தொடக்கம் மகாகணபதி ஹோமம், பக்தர்கள் திருமாலை அணிந்து விரதம் எடுத்து கொள்ளும் வைபவம் இடம்பெற்றது.

இவ்வாலயத்தில் இன்று முதல் எதிர்வரும் தை மாதம்-14 ஆம் திகதி சனிக்கிழமை தைப்பொங்கல் திருநாளன்று இடம்பெறும் மகரஜோதிப் பெருவிழா வரை தொடர்ந்தும் 60 நாட்களுக்கு மண்டல விரத பூசைகள் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

தினசாி மாலை 6 மணியளவில் அபிஷேகம் பூஜை பஜனை படிப்பூஜை நடைபெறும். அனைத்து ஐயப்ப சாமிமார்களும் கலந்து கொள்ளுமாறு ஆலய தர்மகத்தா கேட்டுக்கொள்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button