விளையாட்டு

உண்மையான அக்கறையுடன் என்னை அனுகுபவர் டோனி மட்டுமே – விராட் கோலி உருக்கம்

இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் மூன்று அரை சதங்களை பதிவு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 82 ரன்கள் எடுத்து, இந்தியாவை அசாத்தியமான வெற்றிக்கு வழிநடத்தினார்.

இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாட்களை சந்தித்தார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்த கோலிக்கு ரன்கள் அடிப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் போது, ​​ஜனவரி மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகியபோது, ​​தனக்கு ஆறுதல் அளித்து மெசேஜ் அனுப்பிய ஒரே நபர் டோனி மட்டுமே என்று கோலி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடிய விராட் கோலி டோனி குறித்து பல்வேறு விஷயங்களை மனம் திறந்துள்ளார்.

விராட் கோலி, நீங்கள் வலுவாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நேரங்களில் தனிப்பட்ட அளவில் வலுவாக உள்ளது போல தோற்றம் கொடுத்துவிட்டால், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என கேட்க மறந்து விடுவார்கள் என டோனி தனக்கு மேசேஜ் அனுப்பியது என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என விராட் கோலி கூறினார்.

மேலும் டோனி உடனான உறவு எனக்கு கிடைத்த வரம் என்றும் என் மீது உண்மையான அக்கறையுடன் என்னை அனுகுபவர் டோனி மட்டுமே, நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பும் மரியாதையும் மிகச் சிறந்தது என டோனி குறித்து விராட் கோலி மனம் திறந்து உருக்கமாக பேசியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button