உலகம்

இங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் உருவ நாணயம்

லண்டன்: இங்கிலாந்தில் மன்னர் 3ம் சார்லசின் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல்நலக் குறைவினால் கடந்த மாதம் 8ம் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய மன்னர் 3ம் சார்லஸ் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தை ராயல் மின்ட் நேற்று வெளியிட்டது. ராணியின் உருவப்படம் நாணயத்தின் வலது பக்கம் பார்ப்பதுபோல் இருந்த நிலையில் பாரம்பரியத்திற்கு ஏற்ப மன்னரின் உருவப்படம் எதிர் திசையில் இடது பக்கம் உள்ளது. இது, விரைவில் புழக்கத்துக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி 2ம் எலிசபெத்தின் இறப்பைக் குறிக்கும் வகையில் புதிய 5 பவுண்ட் நாணயம், 50 பென்னி நாணயத்தில் ராணியின் உருவப்படம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மன்னர் 3ம் சார்லசின் உருவத்தை சுற்றி லத்தீன் மொழியில் CHARLES III.D.G.REX.F.D.5 POUNDS.2022 என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘மன்னர் 3ம் சார்லஸ், கடவுளின் அருளால், நம்பிக்கையை பாதுகாப்பார்’ என்று அர்த்தமாகும்.* இங்கிலாந்து முழுவதும் 2,700 கோடி எலிசபெத் ராணி உருவம் பொறித்த நாணயங்கள் புழக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button