இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு ஐ.ம.சக்தி மற்றும் சு.கட்சி ஆதரவு

அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு 100 வீத பலத்தை ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (1) கொழும்பில் தெரிவித்தார்.

அடக்குமுறைக்கு எதிராக தனித்து நின்று போராடாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அடக்குமுறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் கூட்டுப் பிரகடனத்தில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கத்தின் அடக்குமுறை வேலைத்திட்டத்திற்கு எதிராக நாளை (2) நடைபெறவுள்ள பாரிய போராட்டம் மற்றும் கண்டனப் பிரச்சாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்கேற்கும் என அதன் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை நசுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் இந்தப் போராட்டத்திற்கு தாம் நிச்சயமாக ஆதரவளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ராஜபக்ஷ குடும்ப ஆட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து புதிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button