உலகம்

இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் 268 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை  268  பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தில் 162 பேர் உயிரிழந்தாக நேற்று தெரிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது அந்த எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளதாக சியான்ஜூர் நகர நிர்வாகத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஒட்டுமொத்த நகரமே குலுங்கியது. இதனால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பீதியுடன் வீதிகளுக்கு ஓடி வந்தனர். நிலநடுக்கத்திற்குப் பின்னர் 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button