விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 168 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பாண்ட்யா, விராட் கோலி அரைசதம் அடித்தனர்.

இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அலெக்ஸ் – பட்லர் அதிரடியாக விளையாடினர். 4 ஓவர் மீதம் உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 13-ந் தேதி நடக்கும் இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் மோதும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button